நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்ற பின்னர் தான் அறிவித்த அறிக்கைகளை ஒன்றாக செய்து வரும் நிலையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம் பெற முடியாத திட்டங்களை துறை ரீதியான மானிய கோரிக்கை மற்றும் 110 விதியின் கீழ் அறிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.