வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள் வரத் தொடங்கியுள்ளது. இந்த யானைகள் வீடுகளை நாசம் செய்வதுடன் விவசாய நிலங்களையும் நாசம் செய்து வருகிறது. இந்த காட்டு யானைகள் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு, பாக்கு மரம், வாழை மரங்கள் போன்றவற்றை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக அகழிகள் அமைக்க வேண்டும் எனகோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த அகழிகள் சரியான பராமரிப்பு இல்லாததால் மண் நிறைந்து காணப்படுகிறது. எனவே காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுப்பதற்கான உரிய நடவடிக்கையை வனத்துறையினர் எடுக்க வேண்டும் என் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.