Categories
அரசியல்

அட்டகாசமான அம்சங்களுடன் 2 லேப்டாப்கள்…. ஏசர் நிறுவனத்தின் அசத்தலான அறிமுகம்….!!!!

ஏசர் நிறுவனம் ஸ்விஃப்ட் 3 மற்றும் ஸ்விஃப்ட் 5 லேப்டாப்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த லேப்டாப்கள் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

ஸ்விஃப்ட் 5 லேப்டாப்:-

14-inch WQXGA (2,560×1,600 pixels) டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் வழங்கப்பட்டுள்ளது. 16:10 இந்த லேப்டாப்பின் ஆஸ்பெக்ட் ரேட்ஷியோ ஆகும். அதேபோல் இந்த லேப்டாப்பின் ஸ்கிரீன் டூ பாடி ரேட்ஷியோ 92.22 ஆகும். தேய்மானம் மற்றும் பாதுகாப்புக்கு ஐயானிக் சில்வர் இந்த லேப்டாப்பின் டிஸ்பிளே ஆன்டி மைக்ரோபியல் கார்னிங் கொண்ட கொரில்லா கிளாஸுடன் உட் செலுத்தப்பட்டுள்ளது. 12 கோர் இன்டல் கோர் சிபியூ இந்த லேப்டாப்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும் இன்டெல் ஐரிஸ் எக்ஸ்இ கிராபிக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 2 டிபி PCIe Gen 4 SSD ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இதில் டூயல் சேனல் LPDDR5 ரேம் 16 ஜிபி அளவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் டச்பேட் பிளாஸ்டிக் குப்பைகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ள ஓஷன்கிளாஸ் என்றழைக்கப்படுகிறது. மல்டி ஃபிங்கர் மூமன்ட்ஸ் அம்சத்தை இந்த லேப்டாப் பெற்றுள்ளது. இதில் வாய்ஸ் காம்பெட்டபிலிட்டி கொண்ட கோர்டனா, கைரேகை சென்சார் பவர் பட்டன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெளிச்சத்திலும் அதிக தரம் வாய்ந்த வீடியோக்களை எடுக்க இதில் ஏசரின் டெம்பரல் நாய்ஸ் ரிடக்‌ஷன் கொண்ட ஃபுல் ஹெச்.டி MIPI வெப்கேம் தரப்பட்டுள்ளது. இரைச்சல் இல்லாமல் உரையாடுவதற்கு ஏ.ஐ நாய்ஸ் ரெடக்‌ஷன் டெக்னாலஜியும் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரண கீபோர்ட்டை விட இதன் பேக் லிட் கீபோர்ட் 8-10% வெப்பத்தை வெளியிட கூடியது. இதில் காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்காக ட்வின்ஏர் டூயல் ஃபேன் சிஸ்டர் மற்றும் டி6 வெப்ப பைப்புகள் தரப்பட்டுள்ளது.

இந்த லேப்டாப்பில் பேட்டரி லைஃப் 10 மணி நேரம் வரை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 30 நிமிடம் சார்ஜ் ஏற்றினால் 4 மணி நிற்கும் திறனை ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. தன்டர்போல்ட் 4 இணைப்பு, 3.2 ஜென் 1 யூஎஸ்பிக்கள், வைஃபை 6இ, ஹெச்.டி.எம்.ஐ 2.1 போர்ட் உள்ளிட்டவை கொண்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை இந்தியாவில் ரூ.1,12,700-க்கும், சீனாவில் ரூ.1,19,000-க்கும், ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் ரூ.1,51,800-க்கும் கிடைக்கும். இந்த லேப்டாப்பின் இந்திய வெளியீட்டு தேதி குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்:-

16:9 என்ற ரேட்ஷியோவில் 14 இன்ச் ஃபுல் ஹெச்.டி அல்லது QHD டச் ஸ்கிரீன் டிஸ்பிளே ஏசர் ஸ்விஃப்ட் 3 லேப்டாப்பில் வழங்கப்ப்பட்டுள்ளது. 12 ஜெனரேஜன் இண்டல் கோர் பிராசஸர் இந்த லேப்டாப்பில் தரப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.டி ஸ்டோரேஜ் 2 டிபி வரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிற லேப்டாப்களை விட இந்த லேப்டாப்பில் ட்வின் ஏர் டூயல் ஃபேன் கூலிங் சிஸ்டம் 65.8% திறனை கொடுக்கிறது. ஸ்விஃப்ட் 5 லேப்டாப்பில் உள்ளது போலவே இந்த லேப்டாப்பில் பிற அம்சங்கள் அனைத்தும் இதிலும் தரப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் வட அமெரிக்காவில் ரூ.64,000-க்கும், சீனாவில் ரூ.65,500-க்கும், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் ரூ.1,01,200-க்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |