Categories
உலக செய்திகள்

அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு இந்த சலுகை உண்டு…. பிரிட்டன் அரசின் அதிரடி அறிவிப்பு…. யாருக்கு தெரியுமா …?

பிரிட்டன் அரசு, உக்ரைன் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களுக்கு மாதம் 3,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பால் ஏராளமான உக்ரைன்  மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில ஹோம்ஸ் பார் உக்ரைன் எனும் திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. அகதிகளாக வருவோருக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் தங்க இடம் அளிப்பவர்களுக்கு மாதம் நிதி உதவி 3,500 வழங்கப்படும் என கூறியுள்ளது.

இந்த இக்கட்டான நிலையில் உக்ரைனுக்கு பிரிட்டன் துணை நிற்கும் என்றும் முடிந்தவரை விரைவாக பலருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மக்கள் புரிந்து கொள்வார்கள் எனவும் அந்நாட்டின் வீட்டுவசதித்துறை அமைச்சர் மைக்கேல் கோவ் கூறியுள்ளார்.

Categories

Tech |