மராட்டியத்தின் பைத்தன் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய, கூட்டம் நிறைந்த பேருந்து நிலையம் ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி ஒரு வேலையாக வந்துள்ளார். இதற்கிடையில் அந்த ஆண் நண்பருக்கு மற்றொரு தோழியும் இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒன்றாக செல்வது பற்றி தகவலை அறிந்த மற்றொரு சிறுமி உடனே புறப்பட்டு அவர்களை தேடி சென்றுள்ளார். இதையடுத்து அவர்களை கண்டறிந்த அச்சிறுமி மற்றொரு சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பயணிகள் அனைவரும் திரண்டு விட்டனர். இச்சம்பவத்திற்கு இடையே ஆண் நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் அப்பகுதியில் இருந்து தப்பி சென்றுவிட்டார். இவர்களது வாக்குவாதம் முற்றி மோதலாக மாறி இருக்கிறது. இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். பின் உடனே சிறுமிகள் 2 பேரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதனை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. பின் 2 சிறுமிகளும் விடுவிக்கப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.