Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா….!! 8 மாதத்தில் இத்தனை கோடியா?…. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது.

ஆந்திரா  மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்வது வழக்கம். மேலும் அவர்கள் தங்கம், வைரம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ்  அதிக அளவில் பரவியது. இதனால் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் உள்ளது.

மேலும் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது அதிக அளவில் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய வருகின்றனர்.  கடந்த 8 மாதங்களில் ஆயிரம் கோடி காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும்  ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 1029 கோடி வசூல் செய்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |