உலகத்திலேயே அதிக மதிப்புள்ள தண்ணீர் பாட்டிலின் விலை என்னன்னு தெரியுமா….? அக்வா டி கிறிஸ்டல்லோ டிரிபுடோ ஏ மோடிக்லியானி உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த தண்ணீர் பாட்டில் ஆகும். இதன் 750 மில்லி லிட்டர் தண்ணீர் 45 லட்ச ரூபாய் ஆகும். இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் பிஜியில் உள்ள இயற்கை நீரூற்றுகளில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரை இதில் சரியான அளவில் கலந்து வைத்துள்ளனர். இந்தியாவிலும் இதுபோன்ற இயற்கையான ஸ்பிரிங் வாட்டர் பாட்டில்கள் ரூ.50 முதல் ரூ.150 வரை விலைபோகின்றன. கற்பனைக்கு எட்டாத அக்வா டி கிறிஸ்டல்லோ விலைக்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த பாட்டில் முழுவதும் 24 காரட் தங்கத்தினால் ஆனது. இதனை உலகின் மிகவும் பிரபலமான பாட்டில் வடிவமைப்பாளரான பெர்னாண்டோ அல்டமிரானோவால் வடிவமைத்துள்ளார்.
Categories
அடேங்கப்பா….!! 750 மி.லி தண்ணீர் 45 லட்ச ரூபாயா….? இதான் காரணமா…? சுவாரஸ்யமான தகவல் இதோ…!!
