Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!!…. 3 மாதம் விண்ணில் என்ன செய்தார்கள்…? அசத்திய சீன விஞ்ஞானிகள்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!

சீனா தனது நாட்டில் தனக்கென தனியாக ஒரு விண்வெளி  நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தியான்ஹே என்ற விண்வெளி நிலையத்தை கட்ட முடிவு செய்து இந்த வருட இறுதிக்குள் அதன் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது. அப்படி கட்டுமான பணிகள் முடிவடையும் பட்சத்தில் சொந்தமாக விண்வெளி நிலையம் வைத்திருக்கும் ஒரே நாடாக சீனா இருக்கும்.

கடந்த ஜூன் 5-ம் தேதி ஷென்சோ-14 விண்கலத்தில் சீனா 3  வீரர்களை விண்வெளிக்கு  அனுப்பியதன் நோக்கம் விண்வெளி நிலையத்தை கட்டமைப்பதாகும்.  அவர்கள் கடந்த 6 மாத காலமாக விண்வெளி நிலையத்தை அமைப்பது தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கடந்த 6 மாத காலமாக  விண்வெளி நிலையத்தில் வேலைபார்த்து   வந்த 3 விண்வெளி வீரர்களும் நேற்று ஷென்சோ-14 விண்கலத்தில் பூமிக்கு வந்தனர். அப்போது சீனாவின் மங்கோலியா பிராந்தியத்தில் இந்த விண்கலம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |