Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! 1 வாரத்தில் மட்டும் இவ்வளவா…..? ரூ. 8.35 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசி கடத்தல்….. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழக அரசு ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசியமான பொருள்கள் வழங்கப்படுகிறது. இந்த பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மலிவு விலை பொருட்களை சிலர் கள்ளச் சந்தையில் திருட்டுத்தனமாக விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். இதை தடுக்கும் பணியில் உணவுப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்கள், குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பதுக்கி வைக்கப்படும் அரசி  மற்றும் கடத்தப்படும் அரசி, கடத்தலுக்கு  பயன்படும் வாகனங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்வதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 22-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான விவரங்களை தற்போது அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 1478 குவிண்டால் டன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 8,35,070 ஆகும். மேலும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, 212 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |