Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா..!! 1 கிலோ காய்கறி 1 லட்சமா….? விவசாயியின் அசத்தல் முயற்சி…. குவியும் பாராட்டுக்கள்….!!

பீகாரை சேர்ந்த விவசாயி ஒரு கிலோ 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் காய்கறியை உற்பத்தி செய்து அசத்தியுள்ளார்

தற்போதைய காலகட்டத்தில் விவசாயிகளின் நிலை என்பது சற்று கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது. பாடுபட்டு விளைவித்த பொருட்களை சரியான விலைக்கு விற்க முடியாமல் பல  இடங்களில் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இதனால் விவசாயிகள் விவசாயத்தையே கைவிடும் நிலையும் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் விவசாயத்தில் வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர்.

அவ்வகையில் பீகார் மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த விவசாயியான அம்ரேஷ் சிங் என்பவர் மிகப்பெரிய முயற்சியை எடுத்து 2.5 லட்சம் ரூபாய் செலவு செய்து விலை உயர்ந்த ஹாப் ஹுட்ஸ் தாவரத்தை வளர்த்து வருகிறார். சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு செல்லும் காய்கறிகளில் ஹாப் ஹுட்ஸ் முதன்மையானது. கிலோ ஒன்றுக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகும் இந்த ஹாப் ஹுட்ஸை அம்ரேஷ் தனது நிலம் முழுவதிலும் வளர்த்துள்ளார்.

வருமானத்தையும் உற்பத்தித் திறனையும் அதிகரிக்க ரசாயனம் கலந்த உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் இயற்கையாகவே இந்த தாவரத்தை அம்ரேஷ் வளர்த்து வருகிறார். வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரைப்படி கீழ் வாரணாசியில் உள்ள இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த இந்த தாவரத்தை கொண்டு வந்து அம்ரேஷ் தனது நிலத்தில் வளர்க்கிறார்.

அவரது இந்த ஹாப் ஹுட்ஸின் பூக்கள் பீர் தயாரிக்கவும் அதன் மற்ற பாகங்கள் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகின்றது. அம்ரேஷ் சிங்கின் இந்த விவசாய முயற்சி சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாகி பலரும் தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். காசநோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து விடுதலை பெற உதவும் ஹாப் ஹுட்ஸ் அம்ரேஷின் கடினமான உழைப்பால் கிலோவிற்கு 1000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1,01,489 ரூபாய்) வரை விற்கப்பட்டுள்ளது.

Categories

Tech |