Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!…. வெறும் 3 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம்….. ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தின் பல மாவட்டங்கைளை சேர்ந்த பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் பண்டிகைக் காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு 4 ஆயிரத்து 772 அரசு பேருந்துகளில் 2.43 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்தது.

இதன் காரணமாக சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பல்வேறு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து பல ஊர்களுக்கு 6 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்ற 19ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை முன்பதிவு மற்றும் முன் பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து 6 லட்சத்து 1,288 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

Categories

Tech |