Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!… விளம்பரத்திற்காக ரூ. 1.40 லட்சம் உடை…. அசத்திய முன்னாள் உலக நாயகி…!!!

தமிழில் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். இவர் ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸை திருமணம் செய்த பிறகு அமெரிக்காவில் வசித்துவருகிறார். டிவி தொடர்களில் பிரியங்கா சோப்ரா பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் லண்டன் நிறுவன ஒன்றின் விளம்பரத்தில் அவர் நடித்தார்.

இதற்காக ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள கருப்பு நிற உடையை வாங்கி, அதை அணிந்து தான் அந்த விளம்பரப் படத்தில் பிரியங்கா நடித்துள்ளார். இந்த விளம்பரத்திற்கு சாதாரண உடையே போதுமானது என விளம்பர நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால் இந்த விளம்பரம் மூலம் தனக்கு மீண்டும் ஹாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று பிரியங்கா நம்பியுள்ளார். அதனால் தான் இதற்காக அவர் பெரும் தொகையைச் செலவிட்டு உடை வாங்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |