இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த போட்டியாளர். அவர் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். அவரின் திறமைக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படிப்பட்ட பல்வேறு புகழ்பெற்ற விராட் கோலி, டப் & பெல்ப்ஸ் நிறுவனத்தின் ‘இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்கள்’தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். கோலி என்ற பிராண்டின் மதிப்பு 2020 ஆம் ஆண்டில் ரூ.1,734 கோடியாக உயர்ந்துள்ளது. இரண்டாம் இடம் பிடித்துள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மதிப்பு ரூ.865 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.