நடிகர் பிரபாஸ் விலை உயர்ந்த லம்போகினி காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் நடிகர் பிரபாஸ் . இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது . தற்போது நடிகர் பிரபாஸ் சலார், ராதேஷ்யாம், ஆதி புருஷ் போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகர் பிரபாஸ் புதிதாக ஒரு லம்போகினி கார் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Prabhas anna unveiling the car 😍#Prabhas pic.twitter.com/cxsphLq0A5
— Prabhas Trends (@TrendsPrabhas) March 28, 2021
இந்த ஆரஞ்சு நிற ஆடம்பர காரின் விலை ரூ.6 கோடி. இந்த காரை நடிகர் பிரபாஸ் தனது தந்தை சூரிய நாராயணாவின் பிறந்த நாளுக்காக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த ஆடம்பர காரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .