கடந்த ஆண்டைவிட சீன ராணுவத்திற்கு 7.1 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. இந்நிலையில் சீனா அரசு நடப்பு ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது.
இதனை அடுத்து கடந்த ஆண்டைவிட 7.1 சதவீதம் கூடுதலாக சீன ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு சீனா தனது ராணுவத்திற்காக 209 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பட்ஜெட்டில் 230 பில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 20 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஆகும்.