இங்கிலாந்து நிதியமைச்சரின் மனைவியும், இந்தியருமான அக்சதா மூர்த்தி தனிப்பட்ட சொத்து மதிப்பில் ராணி எலிசபெத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் ராணி எலிசபெத்தின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூபாய் 3,500 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனது தந்தை நாராயணமூர்த்தியால் தொடங்கப்பட்டுள்ள இன்போசிஸில் அக்சதா மூர்த்திக்கு ரூபாய் 7,000 கோடி பங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் அக்சதா மூர்த்தி சொந்த நிறுவனங்களிலிருந்தும் வருவாய் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் குடியுரிமை இல்லாதவர்கள் தங்களுடைய வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையில் அக்சதா மூர்த்தி தன்னுடைய கணவரின் மதிப்பு பாதிக்கப்படாத வகையில் தன் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்த இருப்பதாக கூறியுள்ளார்.