Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… ரஃபேல் வாட்சுல இவ்ளோ விஷயம் இருக்கா… அதன் ஸ்பெஷல் என்ன..? பார்க்கலாம் வாங்க…!!!!!

புத்தகங்கள் தொடங்கி கை கடிகாரம், பேனா, பைக், கார், பெர்ஃப்யூம் வரை கூடுதல் சிறப்பம்சங்களுடன் குறைந்த எண்ணிக்கையில் தயாராகும் ‘ஐகானிக்’ பொருட்களை ஸ்பெஷல் எடிஷன் என கூறுகிறது சர்வதேச நிறுவனங்கள். அந்த பொருட்கள் அனைத்தும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கான signature product ஆக உலகளாவிய சந்தையில் முக்கிய நபர்கள் பயன்படுத்தக்கூடிய பொருட்களாக மாறிவிடுகிறது. அந்த வகையில் கியா போக்ஸ்வேகன், டொயோட்டா, பி.எம்.டபிள்யூ, போன்ற நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ‘ஸ்பெஷல் எடிஷன்’ கார்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது.

இது போன்ற பொருட்களின் மீது ஆசை கொண்டவர்கள் ‘ஸ்பெஷல் எடிஷன்’ வெளியீட்டிற்காக காத்திருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “டசால்ட் எவியேஷன்” நிறுவனம் 36 ரஃபேல் போர் விமானங்களை தயாரித்து வழங்கியது. இந்நிலையில் டசால்ட் நிறுவனத்தின் 50 -ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஸ்விஸ் நாட்டை சேர்ந்த பிரபல வாட்ச் தயாரிப்பு நிறுவனமான Bell & Ross கடந்த 2013 -ஆம் வருடம் பல்கான் போர் விமானத்தின் நினைவாக vintage sports heritage என்ற மாடல் கைக்கடிகாரத்தை வெளியிட்டுள்ளது. அதன் பின் 2015 -ஆம் வருடம் Bell & Ross நிறுவனம் BR-03-94 என்ற மாடல் வாட்ச் ஒன்றை தயாரித்து வெளியிட்டது.

இது விமானத்தைப் போல அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள கூடியது எனவும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே “ஸ்பெஷல் எடிஷன்” ஆக தயாரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ரஃபேல் கடிகாரத்திற்கான சிறப்பு என்னவென்றால் ரபேல் விமானத்தின் டி.என்.ஏ உங்கள் கைகளில் என்பதுதான். இப்படி தயாரான 500 கைக்கடிகாரங்களை உலக அளவில் பல முக்கிய நபர்கள் அப்போதே பதிவு செய்து வாங்கி விட்டார்கள். இதன் விலையானது சுமார் 3.5 லட்சம் தொடங்கி 5.5 லட்சம் வரை நாடுகளின் வரிக்கு ஏற்ப விற்கப்பட்டு வருகிறது. மேலும் இந்திய மதிப்பில் ஒரு ரஃபேல் கைக்கடிகாரத்தின் விலை 4.4 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

  • வாட்ச் கேஸ் பகுதி மேட் ப்ளாக் நிற கேசிங் செராமிக் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளதால் அனைத்து வானிலையையும் இந்த வாட்ச் தாங்கும்.
  • ரபேல் விமானத்தின் லைட் க்ரே நிறத்திலேயே காணப்படும் வாட்ச் டயல் பகுதியில் போர் விமானத்தின் மாதிரியும், ரபேல் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோமெடிக் மெஷின் பொருத்தப்பட்ட கடிகாரத்தின் ஸ்ட்ராப் உயர் தர ரப்பரால் ஆனது தான்.
  • கிலோ மீட்டர் வேகத்தை கணக்கெடுக்கும் Tachy Meter Scale இந்த கடிகாரத்தின் கூடுதல் சிறப்பம்சம்.
  • நீச்சல் நேரங்களில் பயன்படுத்தும் வாட்டர் ரெசிஸ்டன்ட் லெவல் 100 மீட்டராக உள்ளது.
  • மற்ற கைக் கடிகாரங்களை காட்டிலும் ஆகப்பெரும் சிறப்புகள் இல்லை என்றாலும், பிரான்சின் டசால்ட் நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்டதும், ஸ்விஸ் நாட்டின் பிரபல Bell & Ross நிறுவனம் அவர்களின் முந்தைய தயாரிப்புகளை காட்டிலும் ஸ்பெஷல் எடிஷன் படைப்பாக வெளியிட்டதுமே ரபேல் மாடல் கடிகாரத்திற்கான பெருமை என்பதைத் தாண்டி வேறில்லை.

Categories

Tech |