இந்த ஆண்டும் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை உலகளவில் கவனம் ஈர்த்து இருக்கிறது. பிரதமர் மோடி நேற்று செங்கோட்டைக்கு கம்பீரமாக வந்து முப்படைகளின் மரியாதையை ஏற்ற வீடியோவும் , இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றிய வீடியோவும் யூடியூப்பில் முதல் இரண்டு டிரெண்டிங் வீடியோக்களாக இன்று இருந்தன. பிரதமரின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் இந்த வீடியோக்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் தேசிய கொடி ஏற்றும் வீடியோவை 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதை தவிர பிரதமர் மோடி செங்கோட்டையில் குழந்தைகளுடன் உரையாடுவது குறித்த வீடியோவும் டிரெண்டாகி வருகிறது.
Categories
அடேங்கப்பா… ! யூடியூப் டிரெண்டிங்கில் பிரதமர் மோடி முதலிடம்….. புதிய சாதனை….!!!!
