மாநகராட்சி ஆணையர் பிரியா முதலமைச்சரின் வாகனத்தில் தொங்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் மாண்டஸ் புயலின் காரணமாக கனமழை பெய்தது. இந்த புயல் நேற்று அதிகாலை கரையை கடந்தது. இந்நிலையில் புயலினால் வீசிய காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தது. இவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது வாகனத்தில் மேயர் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அவருடன் ககன்தீப் சிங் பேடியும் பயணம் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மேயர் பதவி என்பது மிகவும் மதிப்பு வாய்ந்த பதவியாகும். அதேபோல் ககன்தீப் சிங் தனது செயல்பாடுகளால் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர்கள் இருவருக்கும் தனி வாகனம் உண்டு . ஆனால் முதல்வரின் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.