தமிழ் சினிமாவில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்த பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் தயாராகி வருகிறது. விஜய் தேவரகொண்டாவுடன் ராஸ்மிகா நடித்த கீதா கோவிந்தம் படம் வெற்றி பெற்றதால் ஆந்திராவிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா நடித்த புஷ்பா படம் பழமொழிகளில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.
இதன் மூலம் ராஷ்மிகாவின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. பட வாய்ப்புகளும் குவிக்கின்றன. இதனால் சில வாரங்களுக்கு முன்பு சம்பளத்தை உயர்த்தினார். ஏற்கனவே ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்த அவர் புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிக்க ரூ.4 கோடி கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சம்பளத்தை மேலும் உயர்த்தி இருக்கிறார். புதிய படத்தில் ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் ரூ.5 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புஷ்பா-2 வெளியாகும் முன்பே சம்பளத்தை மேலும் உயர்த்தி இருப்பது தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.