Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!….. புலியுடன் சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய வீர பெண்……. பெரும் பரபரப்பு சம்பவம்……!!!

மத்தியபிரதேசம் மாநிலம் பந்தாவ்கர் புலிகள் சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறியது. அதன் பிறகு அருகில் உள்ள ரோஹனியா கிராமத்துக்குள் புகுந்தது. இதனை அறியாமல் ஒரு வயது மகனை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி திடீரென பாய்ந்து இரண்டு பேரையும் தாக்கியுள்ளது. இதில் மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது.

மகனை கவ்வி செல்ல முயன்ற புலியுடன் போராடி தனது மகனை அந்த பெண் காப்பாற்றி உள்ளார். அந்தப் போராட்டத்தின் போது புலி அதன் நகங்களால் பல முறை அவரை தாக்கியுள்ளது. இருப்பினும் அந்தப் பெண் தன் மகனை காப்பாற்றுவதற்காக போராடியது. இதனையடுத்து அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து புலியை விரட்டி அடித்தனர். மேலும் இரண்டு பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |