இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு லக்ஸூரியஸ் காரை பரிசளித்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் கமல் ஹாசன். இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். கடந்த 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் குவித்து வருகின்ற நிலையில் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
விக்ரம் படம் வெளியான முதல் நான்கு நாட்களில் மட்டுமே 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த படங்களிலேயே விக்ரம் படம் தான் அதிக அளவில் வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. மேலும் திரும்பும் பக்கமெல்லாம் விக்ரம் திரைப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் லக்ஸூரியஸ் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் கமல்ஹாசன். டொயோட்டோ நிறுவனத்தின் லக்ஸூரியஸ் கார் ஒன்றை லோகேஷுக்கு கிஃப்ட்டாக வழங்கியுள்ளார். இதேபோல படத்தின் இணை இயக்குனர்கள் 13 பேருக்கு Tvs Apache RTR 160 பைக்கை பரிசாக வழங்கியுள்ளார் நடிகர் கமல்ஹாசன். Lexus காரின் ஆரம்ப விலை 64,90000 ரூபாய் என தெரிகின்றது. மேலும் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசளிக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்தப் பரிசைப் பெற லோகேஷ் கனகராஜ் உண்மையிலே தகுதியானவர்கள்தான் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.