விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சிக்குள் வரும்போது நாங்கள் நாட்டுப்புற பாடல்களை மட்டும் தான் பாடுவோம் எனக் கூறி தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளனர். செந்தில் பாடும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது தற்போதும் அவர்கள் விஜய் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார்கள்.
https://youtu.be/In9DrnN_dKg
இந்த நிலையில் ராஜலட்சுமி சமீபத்தில் பாடிய புஷ்பா பட பாடல் நல்ல அளவிற்கு ரீச் ஆனது இவர்கள் இருவரும் அண்மையில் மிகவும் கோலாகலமாக தங்களது குழந்தைகளின் காதணி விழாவை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் தற்போது அவர்கள் படு பிரம்மாண்டமாக ஒரு புதிய வீட்டையும் கட்டி இருக்கின்றனர். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு தங்களது வாழ்க்கையில் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்த சூப்பர் சிங்கர் ரூபா அவர்களை அழைத்து வீட்டின் திறப்பு விழாவை நடத்தி இருக்கின்றனர்.