நாடு முழுவதும் கொரோனாவிற்கு பிறகு வேலையின்மை பிரச்சினையால் பலரும் தவித்து வருகின்றனர். இருப்பினும் அரசு சார்பாக வேலை வாய்ப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை அரசு வேலை வாய்ப்புக்காக 67.23 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வரையிலான பதிவு தொடர்பான தரவுகளை வேலைவாய்ப்பகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் பதிவு செய்தார்கள். அவர்களில் 31,40,532 பேர் ஆண்களும், 35, 82,882 பேர் பெண்களும், 268 பேர் மூன்றாம் பாலினத்தவர்களும் அடங்குவர். இதில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சம், 19 முதல் 30 வயது உடையவர்கள் 28 லட்சம், 31 முதல் 48 வயது உடையவர்கள் 18. 30 லட்சம், 40 வயது முதல் 60 வயது உடையவர்கள் 2.30 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 967 பேர் மாற்றுத்திறனாளிகள் என்றும் கூறப்பட்டுள்ளது.