Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா….. “தங்க கட்டில்…. பங்களா… 300 பட்டு புடவை”…. மனைவியை பரிசு மழையில் நனைய வைத்த ரவீந்தர்….!!!!!!

மகாலட்சுமிக்கு ரவீந்தர் கொடுத்த பரிசு குறித்த செய்தி வெளியாகி உள்ளது.

விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ரொடெக்டின்ஸ் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் இருவரையும் இணையத்தில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் மகாலட்சுமிக்கு இதுவரை எந்த கிப்ட் கொடுக்கவில்லை என ரவீந்தர் கூறியிருந்தார். மேலும் அவர் தனக்கு மனைவியான பிறகு தான் பரிசு கொடுக்க வேண்டும் என நினைத்திருந்தேன் என தெரிவித்தார். இந்த நிலையில் மகாலட்சுமிக்கு ரவீந்தர் வழங்கிய பரிசு குறித்து செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 300 பட்டு புடவைகளும் ஒரு பெண்ணுக்கு தேவையான அனைத்து நகைகளையும் தங்கத்தில் வாங்கி கொடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தனது காதல் மனைவிக்கு 70 லட்சம் மதிப்பில் வீடு ஒன்றையும் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் புது தம்பதிகளுக்கான கட்டிலில் தங்க முலாம் பூசப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதில் எந்த அளவிற்கு உண்மையை இருக்கின்றது என தெரியவில்லை குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |