இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் கிருஷ்ணனின் பிறந்தநாளான நேற்று (ஆகஸ்ட் 19) கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடினர். பலரும் தங்களுடைய வீடுகலில் தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் போல வேடமிட்டு அதை கிருஷ்ணனாக பாவித்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா கிருஷ்ணர் கோயிலில் பக்தர்கள் பல காணிக்கைகளை செலுத்தினர்.
இந்த வரிசையில் கிருஷ்ணர் மீது உள்ள பக்தியை வெளிப்படுத்த கிருஷ்ணர் சிலைக்கு ரூ 25 லட்சம் மதிப்பில் ஊஞ்சல் வழங்கி வழிபட்டனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ஊஞ்சல் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது. இந்த தொட்டில் 200 கிராம் தங்கமும், 7 கிலோ வெள்ளியும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.