காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இதுவரை காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
சினிமா ஒருபுறம் இருக்க மறுபுறம் சொந்த ஊரான மதுரையில் பல ஹோட்டல்களையும் நடத்தி வருகிறார். அரசு மருத்துவமனை வளாகத்தில் குறைந்த விலையில் உணவை வழங்கி கஷ்டப்படும் மக்களுக்காக நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் தன்னை நாடிவரும் பலருக்கும் உதவி செய்து வருகிறாராம் சூரி. இந்நிலையில் இவரின் சொத்து மதிப்பு 40 கோடிக்கும் மேலிருக்கும் என்று கூறப்படுகிறது.