இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாடி பில்டிங் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இதில் செங்கல்பட்ட சேர்ந்த ரத்தினம் என்பவர் கலந்து கொண்டார். இவருக்கு 72 வயது ஆகும். இந்தப் போட்டியில் இவர் சிறப்பாக பெர்பார்மன்ஸ் செய்தார். இந்த வயதிலும் இவர் உடல் இரும்பு போல் மெருகேற்றி இளைஞர்களுக்கு டஃப் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து வருகின்ற ஜூலை 15 முதல் 21 ஆம் தேதி வரை மாலத்தீவில் 54 ஆவது ஆசிய பாடிபில்டிங் சாம்பியன் போட்டி நடைபெற உள்ளது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பில் ரத்தினம் பங்கேற்க உள்ளார். இதில் சாதிக்க வயது தடை இல்லை என்று தெரிகிறது.