உலகில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் மட்டும்தான் விவாகரத்து நடப்பது மிக குறைவாக உள்ளது என்று கூறுகிறது ஒரு சர்வதேச அறிக்கை. இந்திய திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நாடுகள் மிகவும் அதிகமான அளவுக்கு விவாகரத்து செய்து வருகின்றது. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு விவாகரத்து செய்த நபரை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். 1908ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்தவர் ஸ்காட்டி ஆல்ஃபி. இவர்தான் உலகிலேயே அதிக முறை விவாகரத்து செய்த நபர். இதுவரை இவர் 29 முறை விவாகரத்து செய்துள்ளார். இவர் திருமணமாகி 19 நாளில் கூட விவாகரத்து செய்துள்ளார்.
இவர் அதிகபட்சமாக ஒருவருடன் 11 வருஷம் மட்டுமே ஒன்றாக வாழ்ந்துள்ளார். இவர் 30 பேரை திருமணம் செய்துள்ளார். இதில் 30 ஆக திருமணம் செய்தவர் லிண்டா யோகி. இவரை தான் அதிகபட்சமாக 23 முறை விவாகரத்து செய்துள்ளார். இதில் ஒரு சோகமான விஷயம் என்னவென்றால் ஸ்காட்டி ஆல்ஃப்பி 1980 வருடம் அவரின் 72 வயதின் போது இறந்தபோது அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்கு கூட அவரின் 30 மனைவிகளும், அவர்களுக்கு பிறந்த பிள்ளைகள் ஒருவரும் கூட வரவில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான சம்பவம்.