Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா…. இதுவரை 5 காளைகள்…. தனியார் வங்கி ஊழியர் சாதனை…. குவியும் பாராட்டு….!!

பொங்கல் திருநாள் என்றாலே நம் அனைவருக்கும் பெரும்பாலும் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு போட்டி தான். தமிழர்களின் பெருமையையும், வீரத்தையும் பரிசளிக்கும் விதமாக இந்தப் போட்டி அமைந்திருக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களது பெயர்களை வழங்குவார்கள். கலந்து கொள்ளும் இளைஞர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் அடக்கும் காளைக்கேற்ப பரிசு வழங்கப்படும்.

அந்தவகையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு என்ற தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கியுள்ளார். மதுரை முத்து பட்டிணபுரம் பகுதியை சேர்ந்த இவர் 2019 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டில் 9 காளைகளை அடக்கி உள்ளதாக கூறியுள்ளார். 

Categories

Tech |