Categories
தேசிய செய்திகள்

அடுத்த 7 மாதத்தில் பெட்ரோல் ரூ.275 ஆக இருக்கும்…. வெளியான பகீர் தகவல்…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது.  இந்நிலையில்  கடந்த 13 நாட்களில் 11 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.99.04க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. இந்நிலையில் பெட்ரோல் விலையை தினமும் 80 காசு உயர்த்தினால் ஒரு மாதத்தில் 24 ரூபாய் அதிகரிக்கும். இதே நிலை நீடித்தால் அடுத்த ஏழு மாதங்களில் அதாவது அடுத்த சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெட்ரோல் விலை ரூ.275 அதிகரித்திருக்கும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு பற்றிய கணக்கு இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |