Categories
மாநில செய்திகள்

அடுத்த 5 நாளுக்கு….. “தமிழ்நாட்ல க்ளைமேட் இப்படிதான் இருக்குமாம்”….. வானிலை தகவல்….!!!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை இப்படித்தான் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வகையில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |