Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்திற்கு உச்சகட்ட அலர்ட்…. யாரும் வெளியே போகாதீங்க…. எச்சரிக்கை…!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது.

இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 65 – 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே 10 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. 396 வீரர்கள் 12 குழுக்களாக 10 மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர். அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழு (NDRF) விரைந்துள்ளது.  மேலும் தமிழக அரசு புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ‘மாண்டஸ் புயல்’ எச்சரிக்கை காரணமாக இன்று 26 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீவிர புயல் சென்னையில் இருந்து தெற்கு மற்றும் தென்கிழக்கு 320 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதால் கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அடுத்த ஆறு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |