Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்க போகுது மழை…. சென்னை வானிலை மையம் தகவல்….!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும். இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருப்பூர், தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திருப்பத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |