Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்திற்கு… “இந்த 10 மாவட்டங்களில் மழை”… வெளியான அறிவிப்பு!!

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது..

அதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவண்ணாமலை, கடலூர் பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

Categories

Tech |