தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சென்னைக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மிக கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழையும், ஒருசில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் அதிக கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குடிநீ,ர் பால், உணவு மற்றும் காய்கறிகளை இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.