நாட்டின் 74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தேசியக்கொடியை ஏற்ற செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடி. முப்படைகளின் மரியாதையை ஏற்றார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பிரதமர் மோடியால் ஏற்றப்பட்டது.
பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. கொரோனா முன்கள பணியாளர்களை நாம் நினைவு கூர வேண்டும். நம் நாட்டிற்காக போராடி கொண்டிருக்கும் முன்கள பணியாளர்களுக்கு என் வீர வணக்கம். சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது. நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், கொரோனாவிற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம். ஒவ்வொரு இந்தியனின் தாரக மந்திரமாக சுயசார்பு பாரதம் இருக்கிறது. நாட்டின் பொருளாதார முன்னேற்றம் சுயசார்பின் மூலம் எட்டப்படும். சுயசார்பு பாரதம் என்ற லட்சியம் மெய்ப்படும். நம்முடைய கனிமவளங்களை கொண்டு நாமே உற்பத்தியும் செய்ய வேண்டும் அடுத்த 2 ஆண்டுகள் எப்படி முன்னேற வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். சுயசார்பு இந்தியா என்ற கனவு மிக விரைவில் நிறைவேறும். நமது கலாச்சாரம் பாரம்பரியத்துக்கு மிகப்பெரும் வரலாறு உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.