Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடுத்த 2 ஆட்டத்தில் பாப்போம்”…. கிஷனை ஓவரா புகழாதீங்க…. விமர்சித்த சுனில்….!!

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்ற கிஷனை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் அவர் குறித்த எதிர்மறை விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார்.

இந்தியா, இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியின் முதல் தொடர் லக்னோவில் நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதில் இஷான் கிஷன் 80 ரன்களை குவித்து இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ளார். இதனால் கிஷனை பலரும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் அவர் குறித்த எதிர்மறை விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இஷான் கிஷன் ரன்களை குவிப்பதற்கு மிக கடுமையாக திணறியுள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் மேற்கிந்திய தீவில் போடப்பட்ட லெந்த் பவுன்சர்களை விட இதில் குறைவுதான் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் தோள்பட்டை வரை மட்டுமே பவுன்சர் இருந்ததால் கிஷன் பந்துகளை தூக்கி அடிப்பதற்கு சுலபமாக இருந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அடுத்து வரும் 2 போட்டிகளில் கிஷன் சிறப்பாக விளையாடினால் அவரது நிலையான ஆட்டம் என்னவென்பது தெரிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |