குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் கே.கே. பட்டேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக இன்று துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பூஜ் நகர மக்களுக்கு முதல் முறையாக கிடைத்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை புதிய விதியை எழுதி இருக்கிறது. 200 படுக்கைகள் வுடைய இந்த மருத்துவமனையானது, மலிவான கட்டணத்துடன், நல்ல தரமுள்ள மருத்துவ வசதிகளை மக்களுக்கு வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இரு தசாப்தங்களுக்கு முன் குஜராத்தில் 1,100 இடங்களுடன்கூடிய 9 மருத்துவ கல்லூரிகளே இருந்தது. ஆனால் இன்று 6 ஆயிரம் இடங்களுடன்கூடிய 36 மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. மேலும் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகளை கட்டுவது என்ற இலக்காலோ (அல்லது) அனைவருக்கும் மருத்துவக் கல்வி கிடைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியாலோ, நாட்டுக்கு அடுத்த 10 வருடங்களில் குறிப்பிட்ட அளவிலான புதிய மருத்துவர்கள் கிடைத்திடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.