அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பொருளாதார வலிமை பெற்ற நாடாக மாற உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா உலகின் 5வது நாடாக இடம் பிடித்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக பொருளாதார நிலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள் இந்தியா மீண்டும் 5வது இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் மூன்றாவது இடத்துக்கு வரவும் வாய்ப்புள்ளதாக உலகப் பொருளாதார நிலவரத்தைக் கண்காணிக்கும் அமைப்புகள் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.