கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்புவின் 47வது படமான இந்தப் படத்தை எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மும்பையில் நிறைவடைந்தது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். மாநாடு வெற்றியை தொடர்ந்து அடுத்த படம் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
