Categories
Tech டெக்னாலஜி

அடுத்த வருடம் தொடக்கத்தில்…. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம்…..!!!!!

ஒன்பிளஸ் நிறுவனமானது சென்ற வருடம் ஜூலை மாதம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்‌ஷிப் தர ட்ரூவயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். இப்போது இம்மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடத்தின் முதல் காலாண்டுவாக்கில் ஒன்பிளஸ் நிறுவனமானது புது பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதன் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்திருக்கிறார்.

புது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல், ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்‌ஷிப் மாடல்- ஒன்பிளஸ் 11 உடன் அறிமுகம் செய்யப்படும் எனவும் முகுல் ஷர்மா தெரிவித்து உள்ளார். ஒவ்வொரு வருடத்தின் துவக்க மாதங்களில் ஒன்பிளஸ் பிரீமியம் ஸ்மார்ட் போன் மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்த வருடம் இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ்ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஸ்டெம் வைத்த இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகாம் டிப்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். அத்துடன் இவற்றில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இவற்றில் வழங்கப்படும் ஆக்டிவ்நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி 45db வரை நாய்ஸ் ரிடக்‌ஷன் வசதியை வழங்கும். மற்ற டாப்எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை போன்றே இவற்றிலும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஆம்பியண்ட் மோட் ஆகிய அம்சங்கள் வழங்கப்படலாம். முன்பே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மூன்று மைக்ரோபோன்களை கொண்டு காலிங் மற்றும் ANC வசதிகளை வழங்கும் என்று கூறப்பட்டது. அதுதான் இதில் ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 

Categories

Tech |