Categories
சினிமா

அடுத்த ரெண்டு வருஷம் ரொம்ப பிசி…. சூர்யாவை கையிலேயே பிடிக்க முடியாது….!!

நடிகர் சூர்யா அடுத்து நடிக்க உள்ள நான்கு படங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் சமீபத்தில் நடித்த ஜெய்பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் சூர்யா நடித்து முடித்து விட்டார். இந்த படம் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் கொரோணா பரவல் காரணமாக இந்த படம் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் என்பதால் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள நான்கு படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டுள்ளார். அடுத்ததாக கலைபுலி எஸ் தாணு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். நடிகர் சூர்யா தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சூர்யா.

Categories

Tech |