இந்திய அரசு இரண்டாம் கட்ட சீன செயலிகளின் தடை பட்டியலை வெளியிட்டுள்ளது.
கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையுடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் பயனர்கள் தனி உரிமையைப் பாதுகாக்கும் வகையில் 59 சீன செயலிகளை அரசு தடை செய்ய திட்டமிட்டுள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற கைபேசி தயாரிப்பு நிறுவனமான சியோமி யின் எம்.ஐ ப்ரவுசர், மெய்டூ நிறுவனத்தின் மெய்பெய் போன்ற செயலிகள் இந்தியாவின் இரண்டாம் கட்ட சீன செயலிகள் தடை பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய இரண்டாம் கட்ட தடை பட்டியலில், பிரபலமான ஹீரோஸ் வார், ஏர் பிரஷ், போஸ்காம், கேப்கட், பெய்டூ உலாவி, எம்ஐ ப்ரவுசர் ஆகிய பல்வேறு சீன செயலிகள் உள்ளடங்கியுள்ளன. அதுமட்டுமன்றி 150க்கும் மேலான சீன செயலிகள் பயனர்களின் தனியுரிமை தகவல்கள் அனைத்தையும் திருடுகிறதா என்பதை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது.