தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் நிற அலர்ட் விடுத்து வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.