தமிழக அரசியலில் இன்று காலை முதல் பரபரப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியின் போடி ஒன்றியத்தில் அடுத்த முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தான் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நகர்வுகள் அரங்கேறின. துணை முதல்வரை சந்தித்து பத்துக்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து இன்று முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஓட்டபட்ட போஸ்டரை கிழிக்க சொல்லி ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. 2021 தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது தொண்டர்களை கவலையடைய வைத்துள்ளது.