Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்பும் நவாஸ் ஷெரீப்… இதுதான் காரணமா…? வெளியான தகவல்…!!!!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப்பிற்கு கடந்த 2018- ஆம் வருடம் ஊழல் வழக்கில் கைது செய்யபட்டார். அவருக்கு  7 வருடம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் உடல்நல பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக லாகூர் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த 2019 ஆம் வருடம் லண்டன் சென்ற நவாஸ் அதன்பின் நாடு திரும்பவில்லை. இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமரான இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பதவிக்காலம் நிறைவடைகின்ற காரணத்தினால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு ஏதுவாக லண்டனில் இருந்து அடுத்த மாதம் பாகிஸ்தான் திரும்ப நவாஸ் ஷெரீப் திட்டமிட்டு இருப்பதாக அந்த நாட்டு ஊடக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இத ஒப்புக் கொண்ட முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகி ஒருவர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த கட்சி ஒப்புக் கொள்ளாது என கூறியுள்ளார். நவாஸ் ஷெரீப் மீதான பனாமா பேப்பர்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர ஷபாஸ் அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |