வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலையால் உருவான நிவர் புயலால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நிவர் புயல் காரணமாக கிட்டத்தட்ட ஒருவாரத்திற்கு மேலாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதைத்தொடர்ந்து நவம்பர் 29ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யப்படாத நிலையில், காரைக்கால் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல கூடாது என மீன்வளத் துறையும் தெரிவித்துள்ளது.