பிரமாண்டமாக உருவாக உள்ள ராஜமௌலி இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படம் ஆர் ஆர் ஆர் ஆகும் . இது ரூபாய் 450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமானது சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி, சீதா ராம ராஜு, கொமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையைப் பற்றிய எடுக்கப்படுகின்ற படமாகும். இதில் சீதாராம ராஜூவாக நடிகர் ராம் சரண் மற்றும் கொமாரம் பீமாக ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள்.
முதலிலேயே ராமராஜூவாக ராம்சரன் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய படக்குழுவினர், தற்பொழுது கொமாரம் பீமாக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரின் டீசரை வெளியிட்டடுள்ளனர். இன்று காலை வெளியிடப்பட்ட ஜூனியர் என்.டி.ஆரின் பீம் டீசர் ரசிகர்களின் மத்தியில் பேச்சு பொருளாகியுள்ளது . அவரை இந்த மாதிரி ஒரு தோற்றத்தில் பார்த்ததே இல்லை என ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து கொண்டாடி வருகின்றனர்.
தற்போது கொரோனா பெரும் தொற்று காரணமாக ஏற்பட்ட மிகப் பெரிய இடைவெளிக்குப் பிறகு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்த 2021 ஆம் ஆண்டு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். இந்தப் படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், இந்தி என பழமொழிகளில் வெளியிடப்பட உள்ளன.