நடிகர் ரஜினி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவான அண்ணாத்த படம் தீபாவளிக்கு தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினி, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் நடிகர் ரஜினி புதிய படத்தில் நடிக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டிய ரஜினி தனக்கு ஒரு கதை தயார் செய்யும்படி அவரிடம் கூறியிருந்தார். இதனால் அடுத்ததாக ரஜினி இவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. விரைவில் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.